மதுரை:மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி முகாமை தொடக்கி வைத்த நிலையில், 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் தசக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பிரசாந்த் துக்காராம் நாயக், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் பியுலா ஜெயஸ்ரீ மற்றும் பல்வேறு முன்னணி வங்கிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமை தொடக்கி வைத்த பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "
வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம்.அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த விவரங்களை சர்வே எடுத்து சேகரிக்கிறோம். தொழில் செய்வதாக போலி சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களையும் கண்டறிந்து வருகிறோம். கடந்த ஆண்டைவிட 4000 கோடி அதிகமாக வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.