தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; “யுவராஜ்-க்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க உரிமை கோர முடியாது” - தமிழக அரசு தகவல்! - Gokulraj Honor Killing Case - GOKULRAJ HONOR KILLING CASE

GOKULRAJ CASE: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 5:20 PM IST

சென்னை:கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி, அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், உள்துறை சார்பில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி யுவராஜ் அளித்த மனுவை விதிகளுக்குட்பட்டு முறையாக பரிசீலித்ததாகவும், சமூகத்தில் யுவராஜ் செய்த குற்றச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அவருக்கு முதல் வகுப்பு வழங்கக் கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளது. எனவே, தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்பதை உரிமையாக யுவராஜ் கோர முடியாது என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்; அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details