சென்னை:திருப்பூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எஸ்.பிக்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 56 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்தும், திருச்சி எஸ்பி வருண் குமாருக்கு உள்ளிட்ட ஏழு பேருக்கு பதவி உயர்வும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு அறிவிப்பில், "திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு, திருச்சி சரக டிஐஜி ஆகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே பொறுப்பில் நீடிக்கப்படுகிறார்.
- நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த வெங்கடராமன், சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பொறுப்பில் நீடிப்பார்.
- தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடவேக்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே பொறுப்பில் நீட்டிக்கப்படுகிறார்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுச் சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய சுந்தரவதனம் சென்னை Q பிரிவு எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சிவகங்கை மாவட்ட எஸ்.பி டேங்கரே பிரவீன் உமேஷ், சென்னை மேற்கு சரகம், லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.