தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர்ப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்திக்கான பயிற்சி.. புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - TN ASSEMBLY SESSION 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly 2024: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ளார்.

கோப்புபடம்
கோப்புபடம் (CREDIT - TN DIPR X PAGE)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:32 PM IST

சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ளார். அவை,

1.நகர்ப்புற இளைஞர்களுக்கு ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆடை உற்பத்திக்கான பயிற்சிகள் (Garments Training) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும்.

2.ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறுகிய கால பயிற்சித் திட்டம் (Short Term Training on Technical Textiles) செயல்படுத்தப்படும்.

3.பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Polytechnic) மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் (I.T.I) தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான படிப்புகள் (Technical Textile Courses) அறிமுகப்படுத்தப்படும்.

4.கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில், புதியதாக இரண்டு ரேப்பியர் தானியங்கி கறிகள் (New Rapier Auto Looms) நிறுவப்படும்.

5.தமிழ்நாட்டில் விளையாட்டு துறைசார் ஜவுளிகளின் (Sport-Tech and Athleisure Dresses) உற்பத்தி மற்றும் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்தான விரிவான ஆய்வு (Detailed Study) மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: “மயில் தேசியப்பறவை என்பதால் சிறையில் அடைக்க முடியாது” - அமைச்சர் மதிவேந்தன் பேச்சு! - TN Assembly Session 2024

ABOUT THE AUTHOR

...view details