தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை ஈஷா மையத்தில் காணமல் போனவர் தொடர்பான வழக்கு; 36 பேரிடம் விசாரணை நடத்தியதாக தமிழ்நாடு அரசு தகவல்! - missing person of Isha Yoga Center - MISSING PERSON OF ISHA YOGA CENTER

Madras High Court: கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:43 PM IST

சென்னை: தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர் காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத்தரக் கோரி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைபேசியில் அழைத்த கணேசன், திருமலை சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, மூன்று நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை விரைந்து முடிக்க அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பிஎஸ்சி, பிசிஏ மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் இலவச பயிற்சி! - விண்ணப்பிப்பது எப்படி? - Chennai Iit Free Training Program

ABOUT THE AUTHOR

...view details