தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி! - பஞ்சு மிட்டாயில் புற்றுநோய்

Panju Mittai sales ban: பஞ்சுமிட்டாயில் Rhodamine B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!
பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 11:18 AM IST

Updated : Feb 17, 2024, 11:53 AM IST

சென்னை:பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், ரோடமின் பி - Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3(1) (2x) Af 3(1) (22) (iii) (v) (viii) & (xi) wo f 26(1) (2) (1) (ii) & (v)-ன் படி பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உணவு பாதுகாப்புத் துறை ஆணையரால், அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவையில் நடந்த காவல்துறை போட்டிகளில் ஊக்க மருந்து? சங்கர் ஜிவால் கலந்து கொண்ட விழாவில் கழிப்பறையில் ஊசிகள்!

Last Updated : Feb 17, 2024, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details