தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம் - புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly 2024: தையல் பயிற்சி சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி அல்லது கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என பொதுத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meyyanathan
அமைச்சர் மெய்யநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 7:34 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, பொதுத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். இதன்படி,

  1. மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை நடைமுறையைச் சார்ந்தோர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் நோக்குடன் அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களே பூர்த்தி செய்திட, தேவைக்கேற்ப இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும்.
  2. முன்னாள் படைவீரரின் மனைவி கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி சான்று பெற்றிருப்பின், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details