சென்னை:சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், காவல்துறை துணை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கூடுதலாக 32 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக இருந்த Dr.V.சசி மோகன், ஈரோடு மாவட்டம் சிறப்பு பணிக்குழு எஸ்.பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை மனித உரிமை ஆணையம் எஸ்.பியாக இருந்த S.மகேஸ்வரன், ஆவடி சரகத்திற்கு துணை காவல் ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த V.பத்ரி நாராயணன், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.