தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு - செல்வப்பெருந்தகைக்கு பரபரப்பு உத்தரவு - Case Against PM Modi - CASE AGAINST PM MODI

Selvaperunthai Case Against PM Modi: பிரதமர் மோடி மீதான வழக்கை விசாரிக்க அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 11:55 AM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாகவும், மத கலவரத்தை உண்டாக்க முயற்சிப்பதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அம்மனுவில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பிரதமர் பெயரை சேர்த்திருப்பதால் பட்டியிலிட நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யும் பிரிவு மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் புகார் கூறியுள்ளனர். இந்த புகார் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, கலைமதி அமர்வு பிரதமர் மோடிக்கு எதிரான அவசர முறையீட்டு மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்த சவுக்கு சங்கரின் தாயார்! - Habeas Corpus For Savukku Shankar

ABOUT THE AUTHOR

...view details