தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு! - Case against PM Modi - CASE AGAINST PM MODI

Case against PM modi: தேர்தல் பிரச்சாரத்தில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், பிரதமர் மோடி கோப்பு படம்
சென்னை உயர் நீதிமன்றம், பிரதமர் மோடி கோப்பு படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:23 PM IST

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதாகவும், மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

அதில், "கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் குஜராத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் என பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் கூறப்பட்டது.

தங்களுடைய மனுவில் பிரதமர் மோடியின் பெயர் இருப்பதால் பட்டியலிட மறுத்து, பதிவுத்துறை எண்ணிட மறுப்பு தெரிவித்துள்ளது எனவும் கூறப்பட்டது. இதையடுத்து முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, கலைமதி தலைமையிலான அமர்வு, குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நாய் கடித்தால் பெயில், மனிதன் தாக்கினால் ஜெயில்! சட்டம் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details