சென்னை:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் சில கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "வினேஷ், நீங்கள் எல்லா வகையிலும் உண்மையான சாம்பியன். உங்கள் வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
ஒரு சில கிராம் கணக்கிற்காக தகுதி இழப்பு செய்ததால் உங்கள் உத்வேகத்தையும், சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தை தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "வினேஷ் நீங்கள் இந்தியாவின் சேம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கு நீங்கள் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்கள். இந்த பின்னடைவு வேதனை அளிக்கிறது. வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரம்: மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியது என்ன? - Vinesh Phogat disqualification