சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இரு தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் 300 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகத் தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “வாகனத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தும், அவர் தனது கட்சியின் தொண்டர்களைச் சந்திக்கச் சென்றதாக விளக்கம் அளித்து காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். அவரது நடவடிக்கை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டது என அவரிடம் விளக்கிய போதிலும், அவர் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு காவல்துறை அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “சி-விஜில் மூலம் இதுவரை 4 ஆயிரத்து 100-க்கு மேல் புகார்கள் வந்துள்ளது. இதுவரை 92.80 சதவீதம் பூத் சிலீப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. விடுபட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.