தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்சங் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்: தொழிலாளர்கள் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டம்! - SAMSUNG PROTEST

சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2025, 7:57 PM IST

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சாம்சங் தொழிற்சாலையில் 1500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், தமிழ்நாடு அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அதனை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இதற்கிடையே கடந்த வாரம் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டது.

இந்த நிலையில், தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத்திலிருந்து விலகுவதாக கட்டாயப்படுத்தி சாம்சங் நிர்வாகம் கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது. சாம்சங் நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்து தொழிற்சாலை இயக்குநரை நேரில் சந்திக்க ஊழியர்கள் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பணி புறக்கணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவிப்பின்றி திடீர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக கூறி 3 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், 3 தொழிலாளர்களை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயில் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை ஊழியர்களிடம் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details