கோவை:அயலகவாழ் தமிழர் மாநாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் டிரேட் கமிஷ்னர் விஷ்ணுவை சந்தித்தார்.
பின்னர் இலங்கை இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதவாது
தமிழ்நாடு அரசு நடத்தும் அயலகவாழ் தமிழர் மாநாட்டிற்காக வருகை தந்துள்ளேன். இதில் பல்வேறு நாடுகளின் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர். இது மிகவும் சிநேகப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்பு என்பது வரலாறு தொட்டே இருந்து வருகிறது. இது தொப்புள்கொடி உறவு. இந்தியாவையும் இலங்கையையும் 32 கிலோ மீட்டர் மட்டும் தான் கடல் பிரிக்கிறது. இருப்பினும் எங்களுக்குள் அன்பு நட்புறவு உண்டு.