தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல் - ANNAMALAI

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் தமிழக வீரர் அஸ்வினுக்கு தமிழக அரசு பாராட்டு மற்றும் ஓய்வு விழா நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை, அஸ்வின் (கோப்புப்படம்)
அண்ணாமலை, அஸ்வின் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu, ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 12:08 PM IST

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை செல்வதற்காக நேற்று (டிச.18) சென்னை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில், '' தமிழக அரசு கேரம் விளையாட்டு வீரருக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்திருப்பதாக செய்திகள் வருகிறது. அது உண்மையாக இருந்தால் செய்தியாளர்களுக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குகேஷின் சாதனை மிகப் பெரிய சாதனை. ஆனால், சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொழுது தான் தமிழகம் ஒரு விளையாட்டு துறையில் மேம்படும்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு தன்னிகரில்லா விளையாட்டு வீரர் அவருக்கும் இதுபோன்று தமிழக அரசு ஒரு நல்ல ஓய்வு விழா நடத்த வேண்டும்.

அமித் ஷா தவறாக பேசவில்லை

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை. எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை உண்மையாக பயன்படுத்தவில்லை, அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அவருடைய பாணியில் பேசினார். அதில் ஒரு சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு எதிர்கட்சி நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள் நான் அம்பேத்கர் பெயரை நேசித்து அரசியல் செய்கிறேன். அதேபோல் அவர்கள் செய்கிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும். எனக்கு முருகரும், அம்பேத்கரும் ஒன்றுதான்.

இன்று திமுகவை எதிர்த்து பேசினால், அவர்கள் சங்கி என திமுகவால் விமர்சனம் செய்யப்படுகிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.

எதிர்த்து கேள்வி கேட்டால் பாஜக டீம்?

திமுகவை எதிர்த்தால் அது பாஜக தான் என்ற பாணியில் திமுக செல்கிறார்கள். அண்ணன் வேல்முருகன் சட்டசபையில் எழுப்பியது நியாயமான கேள்வி. ஆகவே, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் அது பாஜக சார்பாக தான் கேள்வி கேட்கிறார்கள் என்றால் இன்று திமுகவை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன் 1917-இல் ஒரு அமைப்பு துவங்கினீர்கள், அதன் பிறகு அதை திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றினீர்கள். அன்று காங்கிரசை எதிர்த்து அனைத்து சமூகமும் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் என பேசினீர்கள். இன்று அதே காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள்.

அதனால் 2026 தேர்தலில் இவர்கள் (திமுக) காணாமல் தான் போகப் போகிறார்கள். பண்பாடு இல்லாமல் பேசுவது, ஏதாவது கேள்வி கேட்டால், நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை எனக் கூறுவது, இது ஆணவத்தின் உச்சம். இதற்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

உதயநிதி நடப்பதை பார்த்து ''எஜமான் காலடி மண்ணெடுத்து'' என பாடல் போட்டு இதையெல்லாம் பார்க்க வேண்டிய நிலைமை நமக்கு இருக்கிறது. உண்மையான பிரச்சனைகள் பேசப்படாமல் இருக்கிறது. போதை என்பது தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனை. இன்று மக்களும் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஓட்டு போடும் பொழுது சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம்

திமுகவை எதிர்த்து அதிமுக கேள்வி கேட்டால், அதிமுக பாஜகவின் சீ டீம் என கூறுவது... இப்படியே போனால், அனைத்து கட்சியும் பாஜகவின் டீம் என கூற வேண்டியது வரும். இறுதியில் பௌலிங் போடுவதும், பேட்டிங் பிடிப்பதும் நாங்களாகத்தான் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தோன்றுகிறது.

திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களை பாஜகவுடன் ஒப்பிட்டு பேசிவிட்டால் தப்பித்து விடலாம் என நினைக்கிறார்கள். காலம் மாறிவிட்டது, சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்'' என இவ்வாறு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details