திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் இந்த வருடம் 40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால், ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காத காரணத்தினால் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட சேந்தனாங்குடி, பூந்தாழங்குடி, கீழ மணலி மற்றும் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட கல்யாண மகாதேவி, கூத்தங்குடி, அன்னுக்குடி, கருப்பூர், வடகரை, தென்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக, சேந்தனாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சேந்தனாங்குடி பகுதியில் குறுவை நெற்பயிர் பயிரிடப்பட்டு 60 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், அங்கிருக்கும் 50 ஏக்கருக்கும் மேல் பம்பு செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய விவசாயி மூர்த்தி, “கடந்த 15 நாட்களாக நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுவதாலும், மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் 200 அடி ஆழத்திற்கு போடப்பட்ட பம்பு செட் வழியாக கூட நீர் குறைவாக வருகிறது எனக் கூறுகின்றனர்.