சென்னை:திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்கும் பொருட்டு தெற்குரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி சிறப்பு ரயில்களின் பட்டியலை கீழ்காணுமாறு:
1.ரயில் எண்: 06130விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 09.25 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06129 திருவண்ணாமலை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலையில் இருந்து டிசம்பர் 13, 14 & 15, ஆகிஉஅ தேதிகளில் மதியம் 12.40 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.
2.ரயில் எண். 06145விழுப்புரம் - திருவண்ணாமலை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்: டிசம்பர் 12, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06146 திருவண்ணாமலை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 03.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 05.00 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இதையும் படிங்க:வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்; விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!
3.ரயில் எண். 06147 திருச்சிராப்பள்ளி வேலூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்: திருச்சிராப்பள்ளியில் இருந்து டிசம்பர் 13, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டை சென்றடையும். திரும்பும் திசையில் ரயில் எண். 06148 வேலூர் கண்டோன்மென்ட் திருச்சிராப்பள்ளி விரைவு சிறப்பு ரயில் 2024 டிசம்பர் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.00 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.20 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும்.