திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு காந்திநகர் அன்னை கார்டன் பின்புறம் குடியிருப்பு பகுதியில், சாலையோரம் வளர்ந்திருந்த 4 அடி உயர கஞ்சா செடியை கண்ட பொதுமக்கள், வேலம்பாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குறிப்பிட்ட செடியை சோதனையிட்டனர்.
சாலையில் வளர்ந்த கஞ்சா செடி:அதில் அந்த செடி கஞ்சா பயிர் என உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்தச் செடியை அப்புறப்படுத்திய போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தை சீர் செய்தனர். மேலும், கஞ்சா செடி தானாக வளர்ந்ததா? அல்லது பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.