தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கு; கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பார் நிரந்தர பணிநீக்கம்! - red sanders smuggling case - RED SANDERS SMUGGLING CASE

Tirupattur red sanders smuggling case: செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ஆம்பூர் கிராமிய காவல் நிலையம்
ஆம்பூர் கிராமிய காவல் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 7:28 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் சந்தன மரக்கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த செம்மரக் கட்டைகளின் உரிமையாளர் செம்மரக் கட்டைகளை தேடி வந்தபோது, காவல் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக சின்னப்பையன் கூறியுள்ளார்.

அதை நம்பாத கடத்தல் கும்பல் சின்னபையனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதுதொடர்பாக காவல்துறையினரின் தொடர் விசாரணையில், தங்கவேலுவின் உதவியுடன் சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து 7 டன் செம்மரங்களைக் கடத்திச் சென்றதாக வேலூர் அலுமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சின்னபையனின் கோழிப் பண்ணையில் எடுத்துச் சென்ற 7 டன் செம்மரக்கட்டைகளில் 3.5 டன் அளவுக்கு நாகேந்திரன் வீட்டில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், நாகேந்திரனிடம் இருந்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு கூறியதன் பேரில், “நாங்கள் சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்று அனைவரும் பங்கிட்டுக் கொண்டோம்” என நாகேந்திரன் தம்பதி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தங்கவேலுவை கைது செய்த காவல் துறையினர், அவரை வழக்கின் மூன்றாவது குற்றவாளியாக சேர்த்தனர். பி்ன்னர், தங்கவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கின் விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:'அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால்' - காக்கி உடையில் கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்!

ABOUT THE AUTHOR

...view details