தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் கட்டுமானப் பணிக்கு அழைத்து வரப்பட்ட நேபாள தொழிலாளர்கள்.. உள்ளூர் மக்கள் போராட்டம்! - NEPAL WORKERS IN KUDANKULAM - NEPAL WORKERS IN KUDANKULAM

NEPAL WORKERS IN KUDANKULAM: நேபாள நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்களை கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்காக தனியார் நிறுவனம் அழைத்து வரப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 9:15 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஒன்று மற்றும் இரண்டு அணு உலைகள் மூலம் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் நான்காவது அணு உலைகளில் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 5 மற்றும் 6 ஆகிய அணு உலைகளில் 35 சதவீதம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக அணு உலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்காக 2 பேருந்துகளில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை கட்டுமானப் பணிக்கு அழைத்து வந்தள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து உள்ளூரைச் சேர்ந்த "கூடங்குளம் காண்ட்ராக்ட் அசோசியேஷன்" என்ற தொழிற்சங்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேபாள பணியாளர்களை அழைத்து வந்த பேருந்துகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களை கீழே இறக்கி விட்டனர்.

சம்பவம் அறிந்து தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் போலீசார் நேரில் வந்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உள்ளூரிலேயே ஏராளமான படித்த இளைஞர்கள் வேலையின்றி உள்ள நிலையில், அணு உலையில் பணிக்கு பணியாளர்களை அமர்த்தாமல், அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்களை குறைந்த கூலிக்கு அழைத்து வருவதில் என்ன நியாயம் என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏற்கனவே அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமானோர் பணிபுரியும் நிலையில், தற்போது அண்டை நாடான நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை குறைந்த ஊதியத்திற்கு அழைத்து வந்தது ஏன் எனவும், அவர்களை வெளியேற்றும் வரை பணிக்கு யாரையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அணைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: சிறப்பு முகாமை புறக்கணித்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்... காரணம் என்ன? - manjolai workers special camp

ABOUT THE AUTHOR

...view details