திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி ரத்னா திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தினை பார்ப்பதற்காக, மாலை 7.30 மணி அளவில் வந்தார்.
பிரசாரம் நிறைவு.. எம்.ஜி.ஆர் படம் பார்க்க வந்த நயினார் நாகேந்திரன்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Nainar Nagenthiran: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் பார்க்க ரத்னா திரையரங்கிற்கு வந்தார்.
Published : Apr 17, 2024, 10:34 PM IST
படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எம்.ஜி.ஆர் மன்றத்திலிருந்து வந்தவன். பரபரப்பான பிரச்சாரம் முடிவடைந்து, புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக இன்றைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்ற பாடல் அடங்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தினை பார்க்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் வாகன சோதனை தீவிரம்! - Lok Sabha Election 2024