தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திருட்டு..கையும் களவுமாக சிக்கிய தொழிலாளர்கள்! - thoothukudi iron plates theft - THOOTHUKUDI IRON PLATES THEFT

தூத்துக்குடி அனல் மின்நிலைய நிலக்கரி தளத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை திருடிய 3 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கைதான மூன்று தொழிலாளர்கள்
கைதான மூன்று தொழிலாளர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 2:53 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையத்தில், நிலக்கரி கையாளும் பிளான்டில் கன்வயர் சரிவர இயங்குவதற்கு உதவியாக 60 கிலோ எடை கொண்ட இரும்பால் ஆன பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 10 பிளேட்டுகள் திடீரென காணாமல் போனது. இது குறித்து தெர்மல் அனல் மின் நிலைய நிலக்கரி பிரிவு முதன்மை இளநிலை பொறியாளர் சந்திரசேகரன் (60) விசாரணை மேற்கொண்ட போது, திருடுபோன நிலக்கரி தளத்தில் வேலை பார்த்த தொழிலாளிகள் கோரம்பள்ளம் அய்யனடைப்பு செல்வகுமார் (33), கோயில் பிள்ளை நகர் 4வது தெரு முனியாண்டி (46), கதிரேசன் நகர் 3வது தெரு முருகன் (31) ஆகியோர் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் மேலும் ஒரு ஆசிரியர் பணிநீக்கம்!

ஆனாலும் இதனை காட்டிக் கொள்ளாமல், அவர்களை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அதே போல் இரும்பு பிளேட்டுகளை திருடும் நோக்கில் நிலக்கரி கன்வேயர் பகுதிக்கு செல்வகுமார் சென்றபோது, பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் செல்வகுமார் ஏற்கனவே திருடியதையும் தற்போது திருட வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

மேலும், தன்னுடன் வந்த முனியாண்டி மற்றும் முருகன் ஆகிய இருவரும் ஆளுக்கு வெளியே காத்து நிற்பதாகவும் கூறியதை தொடர்ந்து வெளியில் சென்ற போது இருவரும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.

உடனடியாக அவர்களையும் பிடித்த அனல் மின் நிலைய அலுவலர்கள், தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details