ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த சிக்குசித்தா மகன் ரங்கசாமி (60). இவரது மனைவி புட்டுசித்தி (55). இவர்களுக்கு ராஜேஷ் (38), ராதிகா (30), மகஷே் (20) என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷூக்கு திருமணமாகி கேரளாவில் மற்றொரு பகுதியிலும், ராதிகாவுக்கு திருமணமாகி மைசூரிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரங்கசாமி, தனது மனைவி சிக்குசித்தி, மகன் மகேஷூடன் முண்டகை காபி தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரமாலா என்ற இடத்தில் வசித்து வந்தனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தாளவாடி வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இதில் முதலில் அடையாளம் காணப்பட்ட புட்டு சித்தம்மாவின் உடல் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள காமையன்புரம் கிராமத்திற்கு கொண்டு வந்து எரியூட்டப்பட்டது.