விழுப்புரம்:நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பகிறது. அந்த வகையில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவபடிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதவுள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5005 பேர் தேர்வு எழுதவுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், தேர்வு நடைபெறும் இடங்களான விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் பள்ளி மையத்தில் 469 பேரும், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 960, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மையத்தில் 696,
அக்ஷர்தம் பள்ளியில் 600, ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் 600, இ.எஸ்.கலை அறிவியல் கல்லுாரியில் 504, சேக்ரட் ஹார்ட் கலை அறிவியல் கல்லுாரியில் 480, சூர்யா பொறியியல் கல்லுாரியில் 504, ஜான்டூயி இன்டர்நேஷ்னல் பள்ளியில் 192 பேர் என 9 மையங்களில், மொத்தம் 5005 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்பாளரான சேக்ரட் சென்ட்ரல் பள்ளி முதல்வர் சுசீலா தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மதியம் 2:00 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை இந்த தேர்வு நடைபெறவிருக்கிறது.