தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற கோயில் தீமிதி திருவிழா.. 16 அடி நீள காவடி எடுத்து ஆடிய பக்தர்கள்! - Sri Seethala Devi Mariamman Temple

Sri Seethala Devi Mariamman Temple festival: தரங்கம்பாடி அருகே இலுப்பூர் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழாவில், பக்தர்கள் 16 அடி நீள காவடி எடுத்து, ஊர்வலமாக வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காவடி எடுத்து ஆடிய பக்தர்கள்
காவடி எடுத்து ஆடிய பக்தர்கள் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:01 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் 28ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருவிழாவை முன்னிட்டு, கடந்த 20ஆம் தேதி பூச்சொரிதலுடன் காப்புக் கட்டும் நடைபெற்றது.

ஸ்ரீ சீதாளா தேவி மாரியம்மன் கோயில் திருவிழா (Video credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கிராம வீதிகளில் அம்மன் வீதி உலா கொண்டுவரப்பட்டார். 8ஆம் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்காக விரதமிருந்த பக்தர்கள் சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க, சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி உள்ளிட்டவை சுமந்தபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் சக்திகரகம் இறங்கியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், 16 அடி நீள காவடி எடுத்த பக்தர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் பக்தி பரவசம் பொங்க தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திகடணை செலுத்தினர். இது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பச்சகாளி பவளக்காளி ஆட்டமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்..

ABOUT THE AUTHOR

...view details