தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பொது சரக்குகளை கையாள்வதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3ஐ இயந்திரமாக்குவதற்கான 30 வருட சலுகை ஒப்பந்தமானது, துறைமுகம் ஆணையத்திற்கும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட்-க்கும் இடையே கையெழுத்தானது.
இதன்படி, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்பாக சுசாந்த் குமார் புரோஹித், வஉ சிதம்பரனார் துறைமுகம் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ (JSW), தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் சார்பாக மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இணைந்து, துறைமுக நிர்வாக அலுவலகத்தில், துறைமுக ஆணையத்தின் துணைத்தலைவர் சுரேஷ் பாபு மற்றும் JSW தூத்துக்குடி பல்நோக்கு மையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கு சரக்கு தளம் -3, சுமார் ரூபாய் 265.15 கோடி திட்ட மதிப்பில் இயந்திரமயமாக்கமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் துறைமுகத்தில் கூடுதலாக வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். வடக்கு சரக்கு தளம் மூன்றை 30 ஆண்டுகளுக்கு சலுகையாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான சாலை மற்றும் கிரேன் செயல்பாடுகள் கன்வேயர் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், சரக்கு கையாளுவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்தல் போன்றவற்றை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.