தூத்துக்குடி:தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கனிமொழி, அமுதிக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்..
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | கனிமொழி | திமுக | 5,40,729 |
2 | சிவசாமி வேலுமணி | அதிமுக | 1,47,991 |
3 | விஜயசீலன் | தமாகா | 1,22,380 |
4 | ரோவெனா ரூத் ஜேன் | நாதக | 1,20,300 |
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே வெற்றி முகத்தில் இருந்த திமுக தூத்துக்குடியில் மாபெரும் வெற்றியை தழுவியுள்ளது. தற்போது வரை திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், 4,74671 வாக்குகள் பெற்றுள்ளார்.
- 11ஆம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கனிமொழி 3,09,367 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 84,433 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜென் 68,500 வாக்குகள் 3வது இடத்திலும் உள்ளனர். தமாக வேட்பாளர் விஜயசீலன் 67,506 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த வகையில் கனிமொழி அதிமுக வேட்பாளரை விட 2,24,934 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 9ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,55,531 வாக்குகள் பெற்று 1,85,456 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை தொடர்ந்து அதிமுக 70,095 வாக்குகளும், தமாக 54,952 வாக்குகளும, நாம் தமிழர் 57,859 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், ஏழாம் சுற்று முடிவில், திமுக 1,95,369 வாக்குகள் பெற்றுள்ளது. கனிமொழியை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 55,352 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும், தமாக வேட்பாளர் விஜயசீலன் 45,202 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜென் 44,630 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் திமுக வேட்பாளர் கனிமொழி, 1,40,017 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திமுக -அதிமுக நேரடி போட்டி:தூத்துக்குடியில் கடந்த முறை திமுக வேட்பாளரான கனிமொழிக்கு, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் போட்டியை கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த முறை, பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி தமாகவுக்கு ஒதுக்கப்பட்டு, எஸ்டிஆர் விஜயசீலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தமாகாவுக்கு வாக்கு வங்கியே இல்லாத தூத்துக்குடி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதே, இங்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி எனும்படியாக களம் மாறிவிட்டதாக சொல்லப்பட்டது.