தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு; தூத்துக்குடி திமுக கவுன்சிலர் விளக்கம்! - Thoothukudi DMK Councillor Rexlin - THOOTHUKUDI DMK COUNCILLOR REXLIN

Thoothukudi DMK Councilor: தூத்துக்குடியில் உரிய ஆவணம் இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்க திமுக கவுன்சிலர் ரெக்சிலின் துணைபோனதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து 47வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி 47வது வார்டு திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின்
தூத்துக்குடி 47வது வார்டு திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 5:34 PM IST

Updated : Jul 14, 2024, 7:14 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 4வது தெருவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவருக்குச் சொந்தமான இரண்டு வீடு உள்ளது. இந்த வீடுகளுக்கான வீட்டு வரி மற்றும் மின்சார இணைப்பு ஆகியவை சகாயராஜின் பெயரில் உள்ளது. இதனிடையே, சில ஆண்டுக்கு முன்பு சகாயராஜ் இறந்துவிட்டதை அடுத்து, ஒரு விட்டில் அவரது மனைவி ஜெர்மன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

தூத்துக்குடி 47வது வார்டு திமுக கவுன்சிலர் ரெக்ஸ்லின் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், சகாயராஜுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் அவருடைய தங்கை பிரீண்டா என்பவர் அந்த இடத்தை தனக்கு சொந்தமானது எனக் கூறி அபகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு சகாயராஜுக்கு சாதகமாக முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து பிரீண்டா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதி திமுக கவுன்சிலர் ரெக்சிலின் ஏற்பாட்டில் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு அமைக்க குழி தோண்டியுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே, பிரீண்டா பெயரில் வீட்டிற்கு தீர்வை எதுவும் கிடையாது, வீட்டின் மீதான வழக்கும் நிலுவையில் இருக்கிறது, இவ்வாறு இருக்கும் போது குடிநீர் இணைப்பு எப்படி கொடுக்கிறீர்கள் என்று கூறி சகாயராஜின் மனைவி ஜெர்மன், குடிநீர் இணைப்பு அமைக்க தோண்டிய குழியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, குழியில் இறங்கி போராடிக் கொண்டிருந்த ஜெர்மனை பிரீண்டா தாக்கி தலை முடியைப் பிடித்து வெளியே இழுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் விளக்கம் அளித்துள்ளார்.

கவுன்சிலர் விளக்கம்: இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "வீட்டு வரி இல்லாதவர்களுக்கு மாமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் குடிநீர் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், காந்திநகர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் எனது பகுதிக்குட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு தீர்வை ரசீது அடிப்படையில் நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரீண்டாவின் சகோதரி கிறிஸ்ல்டா என்பவர் தனக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பட்டா மற்றும் அடங்கல், ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் மின்வாரிய அட்டை ஆகியவற்றை ஆதாரமாக வைத்து குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட்டிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து குடிநீர் இணைப்பு வழங்க பிளம்பர் ஒருவரிடம் கூறி இருந்தேன். இதனிடையே, குடிநீர் இணைப்பு வழங்க முயன்ற போது தன்னை ஒருவர் தாக்க வருவதாக பிளம்பர் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில் யாரென்று விசாரித்த போது, ஜெர்மனின் மருமகன் என்பது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதிக்குச் சென்று பார்த்த போது, கிறிஸ்டில்டாவின் தங்கை பிரீண்டா மற்றும் சகாயராஜின் மனைவி ஜெர்மன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் குடும்ப சண்டைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், என்னை இந்த பிரச்னையில் ஈடுபடுத்தும் விதத்தில் பதிவுகள் பரவி வருகின்றன.

அவற்றை மறுக்கிறேன், மேலும் அது எனக்கு மிகவும் மன உளைச்சலை அளிக்கிறது. மாநகராட்சியில் அனுமதி பெற்று வந்ததன் அடிப்படையில் இணைப்பு வழங்க பிளம்பரை அனுப்பியது மட்டும் தான் என்னுடைய வேலை. ஆனால், மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறாக செய்திகள் பரப்பப்படுகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:பைப்லைன் குழியில் இறங்கிய பெண்ணை ஆக்ரோசமாக தாக்கிய உறவினர்.. திமுக கவுன்சிலர் உடந்தையா?

Last Updated : Jul 14, 2024, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details