தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகமாக ரெடியாகும் திருமழிசை பேருந்து நிலையம்.. வெள்ள பாதிப்புகளை தடுக்க கலெக்டர் ஆய்வு! - Collector inspects at Thirumazhisai - COLLECTOR INSPECTS AT THIRUMAZHISAI

Collector inspects at Thirumazhisai: திருமழிசை, விச்சூர் தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், வரும் மழைக்காலங்களில் தொழிற்பேட்டையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு நீர் வெளியேற்று கால்வாய்கள், நீர் வழித்தடங்கள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

திருமழிசையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருமழிசையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 1:15 PM IST

திருவள்ளூர்:திருமழிசை தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது அனைத்து தொழிற்சாலைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து எந்திரங்கள் பழுதாகி உற்பத்தி பாதிக்கப்பட்டன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதை அடுத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர் வெளியேற்று கால்வாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு தொழிற்பேட்டை வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் நீர் வழி கால்வாய்கள் மழைநீர் வெளியேற்று கால்வாய்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர், “கடந்த முறை மழைக்காலங்களில் மழை நீர் புகுந்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில், வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றுவதற்கான நீர் வெளியேற்று கால்வாய்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வழித்தடங்களை பார்வையிட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து திருமழிசை தொழிற்பேட்டை தாழ்வான பகுதி. இதன் காரணமாக இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதாகவும் கடந்த முறை மழையின் போது தொழிற்சாலை உரிமையாளர்கள் செய்து வைத்திருந்த இன்சூரன்ஸ் அடிப்படையில், அவர்களுக்கு கிடைத்திருக்கும். சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டது. கடந்த மிக்ஜாம் புயலின் போது 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்த நிலையில், அதே போன்று மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொழிற்பேட்டையில் செய்யப்படும்.

வரும் மழைக்காலங்களில் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படாமல் இருக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியிலிருந்து திருமழிசை தொழிற்பேட்டை 5 மீட்டர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. தண்ணீர் தேங்காமல் நிற்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தஞ்சை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு.. அதிமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி! - Thanjavur Mayor Ramanatha

ABOUT THE AUTHOR

...view details