சென்னை: பாலஸ்தீன் லெபனான் மீது ஓராண்டாக நடைபெற்று வரும் இஸ்ரேல் போரை கண்டித்தும், போரினை நிறுத்தக்கோரியும், மே 17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலத்திலிருந்து எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் வரையிலான மக்கள் திரள் பேரணியை நடைபெற்றது.
பின்னர் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், “பாலஸ்தீன் லெபனான் மீது ஓராண்டாக நடைபெற்று வரும் இஸ்ரேல் போரை கண்டித்தும், நிறுத்தக்கோரியும் மே 17 இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணியை நடத்தினோம். ஹமாஸ் அமைப்பின் தீவிர வாதத்தை ஒடுக்குகிறோம் என்று கூறிக்கொண்டு தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதலால் இதுவரை அப்பாவி பாலஸ்தீனர்கள் ஆயிரதிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் உள்ளனர். தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் போரில் இறங்க உள்ளனர். இந்தப் போரை விரிவுபடுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்தால் மேற்காசியாவில் நடைபெற்று வரும் இந்த ஆபத்தான சூழல் தென் இந்தியாவிலும் நடைபெறும் சூழல் உருவாகும்.
இதையும் படிங்க:"மதுவிலக்கு அமல்படுத்த மட்டும் தேசியம் வேண்டுமா?" - கிருஷ்ணசாமி கேள்வி!
ஒரு நாடு பல்வேறு நாடுகளை அழித்து வருகின்றன. இதற்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவி வருகிறது. இனப்படுகொலை செய்த இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். லெபனான், ஈரான்,சிரியா மீது நடைபெறும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மேலும், மோடி சர்க்கார் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்தும், ஆயுதங்களை கொடுத்தும் உதவி வருகிறது. இந்திய மக்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் மோடி அரசை கண்டித்தும், இனப்படுகொலை செய்த இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேரணியில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் உமர் பாருக், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் மற்றும் பேரணியில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்