வேலூர்:வேலூரில் இன்று மாலை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமூக நீதிக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. இட ஒதுக்கீடு முறையை அழித்து ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது அதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன்.
திருமாவளவன் பேட்டி (Credits- ETV Bharath Tamil Nadu) மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டின் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்.
கள்ளக்குறிச்சி மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி இந்த மாநாட்டிற்கு பொதுமக்களின் தரப்பில் இருந்து குரலாக மாறும் பொருட்டு, மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது.
திமுக இந்த மாநாட்டிற்கு வருகை தருவது விடுதலை சிறுத்தை கட்சிக்கு நம்பிக்கை தருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் நான் மாநாடு தொடர்பாக பேசிய போது முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும், அதற்காக படிப்படியாக கடைகளை குறைத்து விற்பனை இலக்கை குறைக்க வேண்டும் அறிவுறுத்தி இருந்தேன்.
இதையும் படிங்க:விஜய் பெரியாருக்கு செலுத்திய மரியாதை.. திமுக, அதிமுக ரியாக்ஷன் என்ன?
நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் விதியின் 47 இன் படி கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும் மது விளக்கை நடைமுறைப்படுத்த முடியாது இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட மதுவிலக்கு ஆலோசனை தலைவர் பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதை தான் தற்போது முன்னிறுத்தி உள்ளோம். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்தாமல் குறைக்க வேண்டும். விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். இது தொடர்பான கால அட்டவணை வெளியிட வேண்டும் எனவும் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.
99 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்தலில் அடி எடுத்து வைத்த போது ஆட்சியிடம் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறியிருந்தோம். இதனை மூப்பனார் ஆதரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. நீக்கியதை ஊடகங்கள் பெரிதாக்கியது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும் மேடையில் இலங்கை தமிழர் பிரச்சினையை பற்றி பேசி உள்ளேன். அந்த அளவுக்கு எனக்கு துணிச்சல் உள்ளது” என்று திருமாவளவன் கூறினார்.