தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் சுவாமியை தரிசனம் செய்வதற்காகவும் பக்தர்கள் வருகை தருவர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், கடலின் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நவ 29ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் திருச்செந்தூரில் காலை முதலே கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும், மதியத்திற்கு மேல் திருச்செந்தூர் பகுதியில் பரவலான சாரல் மழையும் பெய்து வந்தது.