தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

தேனி மாவட்டம் கூடலூரில், அரசு பேருந்தில் இருந்து பள்ளி மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழும் மாணவர்
அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழும் மாணவர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 5:07 PM IST

தேனி:தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சார்ந்த பப்லு என்பவரின் மகன், கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் கூடலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அரசு டவுன் பஸ்ஸில் ஏறி பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது பள்ளிக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்பதற்கு முன்பாகவே யுவராஜ் இறங்க முயன்றுள்ளதாக தெரிகிறது. அதில் பேருந்து படிக்கட்டில் இருந்து திடீரென மாணவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)

இதில் படுகாயம் அடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:"பல்கலைக்கழக பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடக்கிறது" - பகிரங்க அறிக்கை வெளியீடு!

இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details