தேனி:கம்பம் அருகே இளைஞர் கொலையில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கணவரை இழந்த நந்தினி (32) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சதீஷூக்கு போதைப் பழக்கம் இருந்ததால், நந்தினி சதீஷ் உடன் இருந்த நட்பை துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நந்தினிக்கு பிரபாகரன் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தொலைபேசி வாயிலாக நந்தினியைத் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது, நந்தினி, பிரபாகரனை வைத்து சதீஷை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், அதற்காக கடந்த 2024 மார்ச் 30ஆம் தேதி சதீஷை வீட்டிற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, வீட்டுக்கு வந்த சதீஷை, நந்தினி மற்றும் பிரபாகரன் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக நந்தினி மற்றும் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.