திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டவுண் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில். இந்த திருக்கோயிலில் மூலவராக அருள்மிகு காியமாணிக்கப் பெருமாள் மற்றும் தாயார்கள் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
ராஜராஜ சோழ மன்னனுக்கு காியமாணிக்கன் என்ற சிறப்பு பெயர் உண்டு. அவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருத்தலம் வைகானசம் ஆகம முறைப்படி பூஜைகள், விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் நின்ற திருக்கோலத்திலும், கருட மண்டபத்தில் அருள்மிகு அனந்தபத்மநாபர் என பள்ளிகொண்ட திருக்கோலத்திலும். பிரகாரத்தில் அருள்மிகு லெட்சுமி நாராயணர் என்று வீற்றிருந்த திருக்கோலத்திலும் என மூன்று நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் இன்று (ஏப்.11) நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி காலை கொடியேற்றம் வைகானசம் முறைப்படி நடைபெற்றது.