தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது இடத்தில் ராமர் கோயில் நிகழ்வுகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - virudhunagar

Madurai High Court Branch: விருதுநகரில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ராமர் கோயில் நிகழ்வுகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 6:32 PM IST

மதுரை: விருதுநகரில் அரசுக்கு சொந்தமான பொதுஇடத்தில் இராமர் கோயில் நிகழ்வுகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விருதுநகரை சேர்ந்த சுப்புராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர முறையீடு செய்தார். அதில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில், திருமண மண்டபங்களில் தனியார் கோயில்களில் நேரலையாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு, அனைத்து வகையான பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனை ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் நகராட்சிக்கு சொந்தமான தேசப்பந்து மைதானத்தில் இராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பூஜைகளை நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு காவல்துறை மற்றும் நகராட்சி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமலதா முன்பு அவசர முறையீடு செய்தார். இந்த முறையீடு சம்மந்தமாக நீதிபதி ஹேமலதா உத்தரவு பிறப்பித்தார். அதில் விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் ராமர் கோயில் திறப்பு விழா நேரலைக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: 10,000 சிசிடிவி, டிரோன் கேமராக்களுடன் உச்சக்கட்ட பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details