தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் ஆயுள் தண்டனை கைதி விவகாரம்; சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு!

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வேலூர் சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 12:47 PM IST

சென்னை: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தீவிரமாக கவனிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும், அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இதையும் படிங்க:அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்; ராமதாஸ் அவசர கோரிக்கை..!

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டிஐஜிக்கு எதிரான விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி துறை ரீதியான நடவடிக்கையை தாமதிக்கக் கூடாது எனவும், சிறை கைதிகளை இது போன்று வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது போன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது தீவிரமாக கவனிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details