சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், கால்நடை மருத்துவர் வல்லையப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டையில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். ஆனால், குட்டி குரங்கை ஒப்படைக்க மறுத்த நீதிமன்றம், வேண்டுமானால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று குரங்கு குட்டியை பரிசோதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த குட்டி குரங்கு திடீரென உயிரிழந்தது.
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி குரங்கு கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி உயிரிழந்தது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என கால்நடை மருத்துவர் வல்லையப்பன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார்.
இதையும் படிங்க:ஒன்பது சவரன் நகைக்காக சகோதரி கொலை: திருப்பத்தூர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!