திருப்பூர்:நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அந்த வகையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 4 லட்சத்து 72 ஆயிரத்து 739 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அருணாசலத்தை 1 லட்சத்து 25 ஆயிரத்து 928 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.
அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், உடன் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் இருந்தனர்.
சான்றிதழ் பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன் பேசுகையில், “மக்களை மதமாற்ற முயன்ற மோடி அமைச்சரவையின் தாக்குதலையும், அவர்கள் கட்டமைத்த பொய்யையும் மக்கள் பொடிப்பொடி ஆக்கி விட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாறு காணாத சீரழிவுகளும், நெருக்கடிகளும் ஓரளவிற்கு முடிவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.