தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நம்மாழ்வாருக்கு கிடைத்த வெற்றி.. தமிழக அரசின் விருது பெற்ற இயற்கை விவசாயி சித்தர் பெருமிதம்! - அமைச்சர் பன்னீர்செல்வம்

Nammalvar Awards: தமிழ்நாடு அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான ’நம்மாழ்வார் விருதுகளில்’ முதல் பரிசிற்கு தஞ்சாவூர் மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சித்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நம்மாழ்வார் விருதுகள்
இயற்கை விவசாயி சித்தர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 11:21 AM IST

விவசாயி சித்தர்

தஞ்சாவூர்:’இயற்கை விவசாயம் விருது’ இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கிடைத்த வெற்றி, என தமிழக அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான ’நம்மாழ்வார் விருதுகள்’ பட்டியலில் முதலிடம் பெற்ற சமூக ஆர்வலர் மற்றும் இயற்கை விவசாயி சித்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுகளை அறிவித்துள்ளது. இதில் மூன்று மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “ மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக (ஆர்கானிக்) வேளாண்மையில் ஈடுபடுவதுடன், பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுடன் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி, நம்மாழ்வார் விருதுக்கு மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோன்புச்சாவடியை சேர்ந்த கோ.சித்தர் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியவையும், திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கே.வெ.பழனிசாமிக்கு இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், சான்றிதழ், பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம் அஞ்சுகட்டு கிராமத்தை சேர்ந்த கு.எழிலனுக்கு மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம், சான்றிதழ், பதக்கமும் வழங்கப்படுகிறது.

இது குறித்து, நம்மாழ்வார் விருதுக்கு முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாயி சித்தர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இயற்கை விவசாயத்தை தான் கடந்த 26 ஆண்டுகளாக செய்து வருகிறேன். தமிழக அரசின் உழவர் நலத்துறைச் சார்பாக நிதிநிலை அறிக்கையில் இயற்கை விவசாயிக்கென்று ஒரு பகுதி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மல்லிகை மற்றும் காய்கறி கடைகள் இயற்கை உழவான்மையில் விளைந்த பொருள்களை விற்பனை செய்கின்ற கடையாக இருக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயற்கை விவாசயாத்தை மீண்டும் நாம் மீட்டெடுப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி சித்தர் பெற்ற விருதுகள்

  • வேளாண்மனை செம்மல் (vellanmanai chemmal ) TNAU கோயம்புத்தூர் -2006
  • பாரம்பரிய கால்நடை பாதுகாவலர் (traditional cattle conservator) கோவர்தன் அறக்கட்டளை, சென்னை- 2009
  • இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மைக்கு சிறந்த சேவை (great service to naturopathy and organic farming) INO தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி -2011
  • சிறந்த இயற்கை வாழை விவசாயி (best oraganic banana grower) வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சி- 2014

இதையும் படிங்க: 75வது குடியரசு தின விழா: சென்னையில் கொடியேற்றும் ஆளுநர், விருது வழங்கும் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details