தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள்..டிஜிபி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - TASMAC SHOPS

குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதை மாற்றி அமைப்பது குறித்து ஆராய டிஜிபி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

சென்னை:குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதை மாற்றி அமைப்பது குறித்து ஆராய டிஜிபி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், "தங்களது குடியிருப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் குடியிருப்பு வாசிகளுக்கு பெரிய அளவில் தொந்தரவாக உள்ளது. எனவே, அந்த கடையை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,"என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், "ஏற்கனவே கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முழு குடியிருப்பு பகுதிகளையும் அத்துடன் இணைத்து விதிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது," என தெரிவித்தார்.

இதையடுத்து அந்த குழுவில் யார் இடம் பெற்றுள்ளார்கள் என விவரங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, அந்த குழுவில் தமிழக டிஜிபி-யை தலைவராகவும், உறுப்பினர்களாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆணையர் இடம்பெறும் வகையில் மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளனர். இந்த குழு 6 வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 20 ம் தேதி ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details