தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இவர்கள் தான் என் தற்கொலைக்கு காரணம்" - கடிதம் எழுதி டாஸ்மாக் ஊழியர் தற்கொலை! - THIRUVARUR Tasmac Staff SUICIDE - THIRUVARUR TASMAC STAFF SUICIDE

தனது சாவிற்கு உடன் பணிபுரிந்தவர்களும் மாவட்ட மேலாளரும் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நபரின் புகைப்படம்
தற்கொலை செய்துகொண்ட நபரின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 11:25 AM IST

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 43) . இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புழுதிக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது களப்பால் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டின் பின்பக்கம் பாபு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளியே சென்று வீடு திரும்பிய மனைவி, கணவர் தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாக அலறி துடித்துள்ளார். அலறல் சட்டம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பாபுவின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பாபு எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் களப்பாலில் உள்ள மூன்று டாஸ்மாக் ஊழியர்கள் தான் காரணம் எனவும் கடந்த மூன்று மாதமாக கடையில் பில் போடாமல் இருந்து வருவதாகவும் தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் எனவும் பாபு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இறந்து போன டாஸ்மாக் ஊழியர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் செல்போன் கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details