சென்னை:வரும் அக்டோபர் 30ம் தேதி புதன் கிழமையன்று முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அந்நாளில் முதலமைச்சர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தி: பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 தேவர் ஜெயந்தியின் போது எடுத்த புகைப்படம் (TN DIPR)
Published : Oct 28, 2024, 1:13 PM IST
முன்னதாக கடந்த ஆண்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத் தக்கது.