தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

த.வெ.க. கல்வி விருது விழா: 2ஆம் கட்டமாக இன்று மாணவர்களை சந்திக்கும் விஜய்! - Vijay Education Award Event - VIJAY EDUCATION AWARD EVENT

TVK VIJAY EDUCATION AWARD 2024: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதற்கட்டமாக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு 2ம் கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழா புகைப்படம்
விஜய் கல்வி விருது வழங்கும் விழா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 8:57 AM IST

Updated : Jul 3, 2024, 9:11 AM IST

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது. இந்நிலையில், மீதமுள்ள மாவட்ட மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 2) நடைபெறுகிறது.

அதில், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் உதவி தொகையையும் விஜய் வழங்குகிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் என பெற்றோருடன் சேர்த்து மொத்தம் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோன்று, முதற்கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மண்டபத்திற்கு அதிகாலை 6 மணியளவில் வந்த தவெக தலைவர் விஜய், அதேபோல இந்த முறையும் அதிகாலையிலேயே விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்துவிட்டார்.

அதுமட்டுமின்றி, விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்காக மதிய உணவு தடபுடலாக தயாராகி வருகிறது.

Last Updated : Jul 3, 2024, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details