சென்னை: வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். முன்னதாக, ஜூன் 6 அன்று பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா? - TN School reopening date - TN SCHOOL REOPENING DATE
TN School reopening: தமிழ்நாட்டில் ஜூன் 6-க்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் (Credits - TN School department website)
Published : May 31, 2024, 3:59 PM IST
மேலும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.