சென்னை:2024 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டபேரைவை கூட்டம் இன்று காலை கூடியது, இதில் தமிழக அரசின் உறையை ஆளுநர் புறக்கணித்து இருப்பதும் அதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை(பிப்.12) துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது. இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, ”சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.