டெல்லி:ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தாமல் ஆலையைத் திறப்பது குறித்தும் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வது குறித்தும் முடிவுகள் எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (பிப்.14) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "அரசின் உத்தரவுகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளைப் பலமுறை மீறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.