தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போலாம் ரைட்...' நீலகிரியில் முதல் பெண் நடத்துநர் சுகன்யா! கணவன் பணி புரிந்த கிளையிலேயே பணி! - NILGIRIS WOMAN CONDUCTOR

நீலகியில் முதல் பெண் நடத்துநராக பணியில் சேர்ந்துள்ள சுகன்யா, பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது பணி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

நடத்துநர் சுகன்யா
நடத்துநர் சுகன்யா (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 3:05 PM IST

நீலகிரி: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த கணவன் மரணடைந்த நிலையில் கருணை அடிப்படையில் பணி கிடைத்து நீலகிரியில் முதல் பெண் நடத்துநராக திகழ்கிறார் சுகன்யா.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. பி.காம். பட்டம் முடித்துள்ளார். இவரது கணவர் கருப்பசாமி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

முதலமைச்சருக்கு கடிதம்

கருப்பசாமி கோவை மண்டலத்தின் கோத்தகிரி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் வேலை கேட்டு சுகன்யா விண்ணப்பித்தார். அதோடு தனது குடும்ப கஷ்டத்தை விளக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினார். அதில், ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக சுகன்யா குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிரடி தண்டனை! விளக்குகிறார் வழக்கறிஞர்

இதையடுத்து சுகன்யாவிற்க்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து சுகன்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து சுகன்யாவிக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி வழங்கப்பட்டது.

சுகன்யாவுக்கு வாழ்த்துக்கள்

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில் நீலகிரி கோத்தகிரி கிளையில் நடத்துநராக சுகன்யா பணியில் சேர்ந்தார். அவருக்கு நீலகிரி - கோத்தகிரி பேருந்தில் நடத்துநர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகன்யாவுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் செல்வம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து நடத்துநர் சுகன்யா கூறுகையில், “கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். என் கோரிக்கை குறித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என் பணி இருக்கும். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details