சென்னை : சென்னை Ymca மைதானத்தில், திமுக பவள விழா ஆண்டு மற்றும் திமுக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உரையாற்றினார்.
இதன் பின்னர் மண்டலம் வாரியாக சிறந்த பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழா விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெரியார் விருதை பாப்பமா சார்பில் அவரது பேத்தி ஜெயசுதா பெற்றார்.
அண்ணா விருதை அறந்தாங்கி மிசா ராமநாதன் பெற்றார். கலைஞர் விருதை ஜெகத்ரட்சகனுக்கு கொடுக்கும் போது விருதை கொடுத்த முதலமைச்சர் பரிசு தொகையை கொடுப்பது போல பாவனை காட்டி காசோலையை பின்னே இழுத்த போதே அரங்கமே சிரித்தது.
இதையும் படிங்க :”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே”- திமுக முப்பெரும் விழாவில் ஒலித்த கருணாநிதி குரல்! - karunanidhi speech in ai
பின்னர் காசோலையை சேர்த்து கொடுத்து முதலமைச்சர் வாழ்த்தினார். பாவேந்தர் விருதை கவிஞர் தமிழ்தாசன் பெற்றார். பேராசிரியர் விருதினை வி.பி.ராஜன் பெற்றார். 75ம் ஆண்டு பவள விழாவில் அறிமுகப்படுத்தபட்டுள்ள மு.க.ஸ்டாலின் விருதினை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெற்றார்.
ஏற்புரையாற்றிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "கட்சியை வழிநடத்தும் தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகழகத்தில் யாரை முன்னிறுத்தினால் பொதுமக்களை கவர முடியுமோ அவரை முன்னிறுத்த வேண்டும்.
எனவே, உதயநிதியை துணை முதல்வராக்க முதல்வருக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவியுங்கள், உங்களை துணை முதலமைச்சராக பேராசிரியர் ஏற்றுக்கொண்டது போல நாங்களும் ஏற்றுக்கொள்வோம்" என்றார்.