விருதுநகர்: ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர், அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது 14 ரூபாய் பேருந்து கட்டணத்திற்கு 20 ரூபாய் கொடுத்துள்ளார். பேருந்து கட்டணம் போக மீதி 6 ரூபாயை நடத்துநர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு நடத்துநர் தகாத வார்த்தையால் பொன்பாண்டியனை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழன்” பட பாணியில் உத்தரவு.. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி! - Srivilliputhur court - SRIVILLIPUTHUR COURT
Srivilliputhur Court: பேருந்து கட்டணம் போக மீதித் தொகையை திருப்பிக் கொடுக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு ரூ.15,006 -ஐ பாதிக்கப்பட்ட பயணிக்கு கொடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Published : Mar 26, 2024, 7:45 PM IST
பின்னர், இது குறித்து பொன்பாண்டியன் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி, 6 ரூபாயை திரும்பத் தர வேண்டும் எனவும், மன உளைச்சலுக்காக 10,000 ரூபாயும், வழக்குச் செலவுக்கு 5,000 ரூபாய் என மொத்தம் 15 ஆயிரத்து 6 ரூபாயை கொடுக்க வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆன்லைன் கடன் செயலியில் மிரட்டல்.. கோவில்பட்டி பெண் தற்கொலை முயற்சி! - Online Loan App Scam Issue